Enable Javscript for better performance
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சுநீல், மன்பிரீத் சிங் விலகல்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சுநீல், மன்பிரீத் சிங் விலகல்

    By DIN  |   Published on : 15th October 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sunil

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடவுள்ள இந்திய ஹாக்கி அணியில் இருந்து எஸ்.வி.சுநீல், மன்பிரீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது எஸ்.வி.சுநீலுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக குணமடையாததால் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து விலகியுள்ளார். மன்பிரீத் சிங்கிற்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விலகியுள்ளார்.
    இது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கூறுகையில், "மன்பிரீத் சிங்கிற்கு தொடர்ச்சியாக தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் அதனால் எந்த பிரச்னையும் இல்லை. எனினும் அது பெரிதாகிவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மன்பிரீத் சிங் இடம்பெறவில்லை' என்றார்.
    சுநீலுக்குப் பதிலாக ரமண்தீப் சிங்கும், மன்பிரீத் சிங்கிற்குப் பதிலாக ஆகாஷ்தீப் சிங்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த மன்பிரீத் சிங்கின் விலகலைத் தொடர்ந்து புதிய துணை கேப்டனாக ரூபிந்தர் பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் 20-ஆம் தேதி மலேசியாவின் குவான்டன் நகரில் தொடங்குகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai