Enable Javscript for better performance
இந்தியா-இங்கிலாந்து தொடரில் டிஆர்எஸ்?- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முறை (டிஆர்எஸ்) பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.
    ஆரம்பத்தில் டிஆர்எஸ்ஸுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பிசிசிஐ, இப்போது அதை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
    இது தொடர்பாக ஐசிசி மேலாளர் (கிரிக்கெட்) ஜெஃப் அலார்டைஸ், டிஆர்எஸ்ஸுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பிசிசிஐ நிர்வாகிகளையும், இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவையும் சந்திக்கவிருப்பதை ஐசிசி செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
    2008-இல் இலங்கையில் நடைபெற்ற இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இந்திய அணி பங்கேற்ற இரு நாடுகள் இடையிலான தொடர் எதிலும் டிஆர்எஸ் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai