Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: கேரள அணிக்கு முதல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    isl

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது.
    இதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது கேரள அணி. முன்னதாக மூன்று ஆட்டங்களில் விளையாடியிருந்த கேரள அணி ஒரு டிராவையும், இரு தோல்விகளையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் முழுவதுமாக கேரள அணியின் கையே ஓங்கியிருந்தது. பந்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேரள அணிக்கு அவ்வப்போது மைக்கேல் சோப்ரா கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால் அவையனைத்தையும் மும்பையின் பின்கள வீரர்கள் அபாரமாக செயல்பட்டு முறியடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் நின்ற பெல்ஃபோர்ட் வசம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தை நோக்கியடித்தார். அப்போது கோல் கம்பத்தின் அருகே நின்ற சோப்ரா அதை கோலாக்கினார். இதனால் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு மும்பை அணி ஸ்கோரை சமன் செய்ய போராட, அந்த அணியின் சில கோல் வாய்ப்புகளை கேரள கோல் கீப்பர் முறியடித்தார். கடைசி 10 நிமிடங்களில் மும்பை கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
    இந்த சீசனில் மும்பை அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் விளையாடிய 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளையும், ஒரு டிராவையும் பதிவு செய்திருந்தது. மும்பை அணி 7 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கேரள அணி 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டம்
    டெல்லி-நார்த் ஈஸ்ட்
    இடம்: தில்லி, நேரம்: இரவு 7
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai