Enable Javscript for better performance
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை அணி சாம்பியன்

    By DIN  |   Published on : 15th October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    valiball

    சென்னை நர்பதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா பள்ளி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் சாகர் பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன்.

    சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டியில் சென்னை நர்பதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான 4-கிளஸ்டர் மகளிர் வாலிபால் போட்டிகள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
    இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. அரையிறுதிக்கு பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி, சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளி, சென்னை நர்பதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா, திருச்சி விக்னேஷ் வித்யாலயா ஆகிய 4 அணிகள்
    தகுதிபெற்றன.
    பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில், மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அணியை நர்பதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா அணி வென்றது. இந்த அணிக்கு கோப்பையையும், அரையிறுதி வரை முன்னேறிய அணிகளுக்கு சான்றிதழ்களையும் சாகர் இன்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன் வழங்கினார்.


     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai