Enable Javscript for better performance
தில்லி மாரத்தானில் ஒலிம்பிக் சாம்பியன் பங்கேற்கிறார்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மாரத்தானில் ஒலிம்பிக் சாம்பியன் பங்கேற்கிறார்

    By DIN  |   Published on : 15th October 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kenya

    தில்லியில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அரை மாரத்தானில் ரியோ ஒலிம்பிக் மாரத்தானில் சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் இல்யூத் கிப்கோகே பங்கேற்கிறார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு கிப்கோகே பங்கேற்கவுள்ள முதல் போட்டி இதுதான். 2015-க்குப் பிறகு முதல்முறையாக அரை மாரத்தானில் பங்கேற்கிறார் கிப்கோகே.
    இது குறித்து அவர் கூறியதாவது: தில்லியில் 2010-இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 5,000 மீ. ஓட்டத்தில் வெள்ளி வென்றேன். 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தில்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறேன். சாலையில் நடைபெறவுள்ள தில்லி அரை மாரத்தானில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai