Enable Javscript for better performance
வெள்ளிப் பதக்கத்தால் நம்பிக்கை பெற்றிருக்கிறேன்- Dinamani

சுடச்சுட

    
    pvsindhu

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையைத் தந்துள்ளது. அதனால் வரும் போட்டிகளில் நெருக்கடியின்றி விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் போட்டிகளுக்காக தற்போது தயாராகி வருகிறேன். அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை புறப்படுகிறேன்.
    ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கம், எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
    இனிவரும் ஆட்டங்களில் அனைவருடைய பார்வையும் என் மீதுதான் இருக்கும். எனினும் நெருக்கடிக்கு உள்ளாகாமல் விளையாடுவேன். களத்தில் 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai