அமெரிக்க ஓபன்: காலிறுதியில் விளையாடும் வீராங்கனைகள்!
By DIN | Published on : 06th September 2016 11:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் காலிறுதியில் விளையாடும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றின் முடிவில் காலிறுதியில் விளையாடும் வீராங்கனைகளின் பட்டியல் கிடைத்துள்ளது.
மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹலேப், கொஞ்ஜூ, பிளிஸ்கோவா, வோஸ்னியாகி, செவாஸ்டோவா, ராபர்ட்டா வின்ஸி, ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் காலிறுதிக்குத் தேர்வாகியுள்ளார்.
காலிறுதி போட்டி
செரீனா வில்லியம்ஸ் - சிமோனா ஹலேப்
கொஞ்ஜூ - பிளிஸ்கோவா
வோஸ்னியாகி - செவாஸ்டோவா
ராபர்ட்டா வின்ஸி - ஏஞ்ஜெலிக் கெர்பர்