சுடச்சுட

    
    swim

    7 தங்கப் பதக்கங்கள் வென்ற டிரெஸ்ஸேல்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 17 நாள்கள் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது.
    வழக்கம்போல் இந்த முறையும் சாதனைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை. மீன்களைப் போன்று தண்ணீரில் வேகமாக நீந்தி கண் இமைக்கும் நேரத்தில் இலக்கை எட்டி ரசிகர்களை வியக்கவைத்த வீரர், வீராங்கனைகளின் புதிய மைல்கற்களைப் பற்றிய ஒரு தொகுப்பு:

    * கடந்த சனிக்கிழமை இரவு 98 நிமிடங்களில் 3 போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றார் அமெரிக்காவின் டிரெஸ்ùஸல். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே செஷனில் 3 தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் டிரெஸ்ùஸல்.


    * இந்தப் போட்டியில் பஹ்ரைனைச் சேர்ந்த 13 வயது வீராங்கனையான ரிதாஜ் அமின் மகளிர் 50 மீ. ஃப்ரீஸ்டைல் மற்றும் பட்டர்ஃபிளை பிரிவுகளில் பங்கேற்றார். அவர் பதக்கம் எதுவும் வெல்லவில்லை.
    எனினும் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இளையவர் (ஆடவர், மகளிர்) என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

    * அமெரிக்காவின் 20 வயதான கேத்தி லெடக்கி, இந்த உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்தமாக அவர் வென்ற தங்கப் பதக்கங்களின்
    எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதற்கு முன்னர் 2013-இல் பார்சிலோனா உலக சாம்பியன்ஷிப்பில் 4 தங்கமும், 2011-இல் ரஷியாவின் காஸன் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கமும் வென்றுள்ளார்.

    * அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது நீச்சல் வீரரான கேலப் டிரெஸ்ஸேல்தான் இந்த உலக சாம்பியன்ஷிப்பின் கதாநாயகன். இவர், தனி நபர் பிரிவில் (50 மீ., 100 மீ. ப்ரீஸ்டைல் மற்றும் 100 மீ. பட்டர்ஃபிளை) மூன்று தங்கம், தொடர் நீச்சல் பிரிவில் (4ஷ்100 மீ. ஃப்ரீஸ்டைல், 4ஷ்100 மீ. கலப்பு ப்ரீஸ்டைல், 4ஷ்100 மீ. கலப்பு மெட்லீ, 4ஷ்100 மீ. மெட்லீ) நான்கு தங்கம் என 7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். இதன்மூலம் ஓர் உலக சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸின் சாதனையை சமன் செய்திருக்கிறார் டிரெஸ்ஸேல். மேலும் அமெரிக்காவில் ஏராளமான பெல்ப்ஸ்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்
    டிரெஸ்ஸேல். ரியோ ஒலிம்பிக்கில் டிரெஸ்ஸேல் இரு தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் உலக சாம்பியன்ஷிப்பில் 7 பதக்கங்கள் வென்றதன் மூலம் நீச்சல் உலகின் இரண்டாம் மைக்கேல் பெல்ப்ஸ் ஆக அடையாளம் காணப்பட்டிருக்கிறார் டிரெஸ்ஸேல்.
    இதுதவிர அமெரிக்காவின் தலைசிறந்த நீச்சல் ஜாம்பவான்களான மைக்கேல் பெல்ப்ஸ் (2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றது உள்பட ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர்), ரியான் லோக்டே (2011 உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றவர்), மார்க் ஸ்பிட்ஸ் (1972 மூனிச் ஒலிம்பிக்கில் 7 தங்கம் வென்றவர்) ஆகியோருக்கு இணையான வீரராக உயர்ந்திருக்கிறார் டிரெஸ்ùஸல்.

    * இந்த உலக சாம்பியன்ஷிப்பில் 6 தனிநபர் உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் ஆடம் பீட்டி ஆடவர் 50 மீ. பிரெஸ்ட்ஸ்டிரோக் பிரிவில் இரு முறை புதிய உலக சாதனையை நிகழ்த்தினார். ஸ்வீடனின் சாரா ஜோஸ்ட்ரோம் மகளிர் 50 மீ. மற்றும் 100 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் உலக சாதனையை பதிவு செய்தார். அமெரிக்காவின் லில்லி கிங் மகளிர் 100 மீ.
    பிரெஸ்ட்ஸ்டிரோக் பிரிவிலும், கனடாவின் கைலி மாஸே, மகளிர் 100 மீ. பேக்ஸ்டிரோக் பிரிவிலும் உலக சாதனை படைத்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai