சுடச்சுட

    
    joco

    சர்வதேச டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    முன்னதாக 4-ஆவது இடத்தில் இருந்த அவர், இப்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஜோகோவிச் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனால் அவர் தரவரிசையில் மேலும் சறுக்கலை சந்திப்பார்.
    அதேநேரத்தில் 5-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்து வீரரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை. ஹம்பர்க் ஓபனில் பட்டம் வென்ற ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயர் 89 இடங்கள் முன்னேறி 49-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
    பெங் ஷுவாய் முன்னேற்றம்: மகளிர் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஜியாங்க்ஸி ஓபனில் பட்டம் வென்ற சீனாவின் பெங் ஷுவாய் 23-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    செக்.குடியரசின் கேத்தரினா சினியாகோவா 17 இடங்கள் முன்னேறி 39-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். விம்பிள்டன் சாம்பியனான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 4-ஆவது இடத்தில் உள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai