சுடச்சுட

  

  செஸ் போட்டியில் பதக்கம் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் பழனிசாமி அளித்தார்

  By DIN  |   Published on : 01st August 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps

  உலக ஜூனியர் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை திங்கள்கிழமை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

  உலக ஜூனியர் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
  இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது.
  நாமக்கல் மாவட்டம் பள்ளத்தூர் படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி.நந்திதா கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதேபோல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.
  நந்திதாவின் சாதனைகளைப் பாராட்டும் வகையிலும், அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையிலும் அவருக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai