சுடச்சுட

    

    இந்திய ஹாக்கி வீரர் வி.ஆர்.ரகுநாத் விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.
    சென்னையில் நடைபெற்று வரும் எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு ஹாக்கி அணிக்காக விளையாடி வரும் ரகுநாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது: அடுத்த சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவது என முடிவெடுத்துள்ளேன். தற்போதைய நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால் இந்திய அணிக்கு என்னுடைய சேவை தேவை என நினைக்கவில்லை.
    நான் ஓய்வு பெற வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கூறவில்லை. ஆனாலும் இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கான தருணம் என்பது தெளிவாக தெரிகிறது. நான் பக்குவப்பட்ட வீரராக இருப்பதால் சூழலை புரிந்துகொண்டு ஓய்வு பெற வேண்டும். அதற்கு நான் மனதளவில் தயாராகிவிட்டேன் என்றார்.
    கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக ரகுநாத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai