சுடச்சுட

  

  அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்!

  By எழில்  |   Published on : 01st August 2017 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hockey_mandeepsingh1xx

   

  அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும் பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கியது.

  பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் இருக்கக்கூடாது, பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு முறை பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது, இந்திய அணியின் தேர்வுக்குழுவில் 3 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பவை லோதா குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகும்.

  இந்நிலையில், ராஜஸ்தான் விளையாட்டு விதிமுறைகள் தொடர்பான வழக்கு ஒன்றில், கிரிக்கெட் போல அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai