Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: தூத்துக்குடி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.
    இரு அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தூத்துக்குடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
    டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில், தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் சதமடித்தார். மொத்தம் 61 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உடன் வந்த கெளஷிக் காந்தி 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார்.
    அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, தொடர்ந்து வந்த சுப்ரமணியன் 16 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது தூத்துக்குடி. ஆகாஷ் சும்ரா 15 ரன்களுடனும், எஸ்.பி.நாதன் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    சேப்பாக் அணி தரப்பில் அலெக்ஸாண்டர் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    அடுத்து ஆடிய சேப்பாக் அணியில் ஆண்டனி தாஸ் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். தூத்துக்குடி தரப்பில் டேவிட்சன், ஸ்ரீனிவாஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai