சுடச்சுட

    

    நியூஸிலாந்து ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.காஷ்யப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை
    2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
    இதில் பிரணாய், தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் ஷேஸார் ஹிரென் ருஸ்தாவிடோவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் இந்தோனேஷியாவின் ஃபிர்மான் அப்துல் கோலிக்கை எதிர்கொள்கிறார்.
    மறுமுனையில், தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் டியோனைசியஸ் ஹையோம் ரும்பாகாவை எதிர்கொண்டார் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் காஷ்யப். இதில் 21-5, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர், தனது 2-ஆவது சுற்றில் நியூஸிலாந்தின் ஆஸ்கார் குவோவை சந்திக்கிறார்.
    செளரவ் வர்மா, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நாதன் டாங்கை வீழ்த்தினார். சிரில் வர்மா 21-13, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ரியான்டோ சுபக்ஜாவை தோற்கடித்தார்.
    இதனிடையே, இந்திய வீரர் அஜய் ஜெயராம் 19-21, 13-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சியா ஹங் லுவிடம் வீழ்ந்தார்.
    பிரதுல் ஜோஷி, நீரஜ் வஷிஷ்த், சாஹில் சிபானி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai