சுடச்சுட

  

  எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் ரயில்வே, பஞ்சாப்

  By DIN  |   Published on : 03rd August 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hocky

  புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய ரயில்வே-ராணுவ லெவன் அணிகள்.

  எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் ரயில்வே, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
  சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 7-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியைத் தோற்கடித்தது.
  தமிழகம் தரப்பில் வீரத் தமிழன் இரு கோல்களையும், சரவணக்குமார் ஒரு கோலையும் அடித்தனர். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தரப்பில் ஜஸ்கரன் சிங், ககன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
  பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) அணியைத் தோற்கடித்தது. ரயில்வே தரப்பில் அஜீத் குமார், மாலக் சிங், அஜ்மீர் சிங், ராஜூ பால் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
  பிபிசிஎல் தரப்பில் அபிஷேக், தேவிந்தர் வால்மீகி ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ரயில்வே அணி தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதன் மூலம் 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்ததோடு, அரையிறுதியையும் உறுதி செய்ததது.
  பஞ்சாப் வெற்றி: 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ராணுவ லெவன் அணியைத் தோற்கடித்தது. பஞ்சாப் தரப்பில் ஷம்ஷெர் சிங் இரு கோல்களையும், சஞ்சய் ஒரு கோலையும் அடித்தனர்.
  இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு, அரையிறுதியையும் உறுதி செய்தது.
  இன்றைய ஆட்டங்கள்
  ஓஎன்ஜிசி-மத்திய செகரட்டரியேட்
  நேரம்: பிற்பகல் 2.30
  தமிழ்நாடு ஹாக்கி யூனிட்-பெங்களூரு
  நேரம்: மாலை 4.15

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai