சுடச்சுட

    
    hariyana

    புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் வீரரை மடக்கிப் பிடிக்கும் ஹரியாணா அணியினர்

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.
    ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் 2 நிமிடங்களில் இரு அணிகளின் ரைடும் வெற்று ரைடாக அமைந்தன. 3-ஆவது நிமிடத்தில் முதல் புள்ளியைப் பெற்ற குஜராத், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஹரியாணா சரிவிலிருந்து மீண்டது. இதன்பிறகு இரு அணிகளும் மாறிமாறி முன்னிலை பெற, 32-ஆவது நிமிடத்தில் குஜராத் அணி 22-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி 5 நிமிடங்களில் ஹரியாணா அணி 13 புள்ளிகளைக் கைப்பற்ற, ஆட்டத்தின் போக்கு மாறியது. இறுதியில் ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது. ஹரியாணா ரைடர் விகாஸ் கன்டோலா சிறப்பான ரைடின் மூலம் 7 புள்ளிகள் பெற்றார். அதே அணியின் சுரேந்தர் சிறப்பான டேக்கிள் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றார்.
    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 30-24 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
    இன்றைய ஆட்டம்
    தெலுகு டைட்டன்ஸ்- பாட்னா பைரேட்ஸ்

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai