சுடச்சுட

    

    எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் ஓஎன்ஜிசி, பெங்களூரு

    By DIN  |   Published on : 04th August 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    murugappa

    வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய ஓஎன்ஜிசி-மத்திய செகரட்டரியேட் அணிகள்.

    91-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஓஎன்ஜிசி, பெங்களூரு ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 8-ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மத்திய செகரட்டரியேட் அணியைத் தோற்கடித்தது.
    ஓஎன்ஜிசி தரப்பில் மச்சையா, நீலம் ùஸஸ் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்த ஓஎன்ஜிசி அணி அரையிறுதியையும் உறுதி செய்தது.
    மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அணியைத் தோற்கடித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் ஞானவேல் ஒரு கோலடித்தார்.
    இதையடுத்து 'ஏ' பிரிவில் தமிழ்நாடு அணியும், பெங்களூரு அணியும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் 'ஏ' பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
    அரையிறுதி: வியாழக்கிழமையோடு குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. வெள்ளிக்கிழமை ஓய்வு நாளாகும். சனிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியன் ரயில்வே-ஓஎன்ஜிசி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி-பெங்களூரு ஹாக்கி அணிகள் மோதுகின்றன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai