சுடச்சுட

  

  *வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முந்தைய சுற்றில் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் கேல் மான்பில்ஸுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
  * சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை திரும்பப்
  பெறும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார் அகில இந்திய ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா.
  *16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட், இந்த முறை 100 மீ., 200 மீ., 4ல100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டு ரசிகர்களிடம் இருந்து பிரியா விடை பெற காத்திருக்கிறார்.
  *ஆக்லாந்தில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், செளரவ் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னறியுள்ளனர்.
  *அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவுடன் டிரா செய்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai