சுடச்சுட

  
  ashwin50xx

   

  கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது. இன்றைய மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 133 ரன்களிலும் ரஹானே 132 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

  அஸ்வின் 92 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்தார்.

  இதையடுத்து அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களும் 250 விக்கெட்டுகளும் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

  குறைந்த டெஸ்டுகளில் 2000 ரன்கள், 250 விக்கெட்டுகள்

  51 அஸ்வின் 
  54 ஹேட்லி 
  55 இம்ரான் கான், போத்தம்

  குறைந்த டெஸ்டுகளில் 2000 ரன்கள், 200 விக்கெட்டுகள்

  42 போத்தம் 

  50 இம்ரான் கான் / கபில் தேவ் 

  51 அஸ்வின் 

  54 ஹாட்லி

  டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் 200 விக்கெட்டுகள்: இந்திய வீரர்கள்

  கபில் தேவ்

  அனில் கும்ப்ளே

  ஹர்பஜன் சிங்

  அஸ்வின்

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai