Enable Javscript for better performance
டிஎன்பில்: சூப்பர் கில்லீஸ் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியைத் தோற்கடித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
    சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.
    இதையடுத்து பேட் செய்த காரைக்குடி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லோகேஷ்வர் 46 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    பின்னர் ஆடிய சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் கோபிநாத் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45, கேப்டன் சதீஷ் 18 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    காரைக்குடி அணி தரப்பில் சாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai