சுடச்சுட

  
  kabadi

  நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குரை சுற்றி வளைக்கும் பெங்களூரு வீரர்கள்.

  புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.
  இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
  நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணி அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
  ஆனால் பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆட, ஆட்டத்தின் போக்கு மாறியது. குறிப்பாக தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடால் புள்ளிகளைப் பெற்றுத்தர, பெங்களூருக்கு சிக்கல் ஏற்பட்டது. எனினும் விடாப்பிடியாகப் போராடிய பெங்களூரு அணி இறுதியில் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் 'த்ரில்' வெற்றி கண்டது.
  புணே வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 26-21 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது.

  இன்றைய ஆட்டங்கள்
  யு-மும்பா-தபாங் டெல்லி, நேரம்: இரவு 8
  பெங்களூரு புல்ஸ்-யு.பி.யோதா, நேரம்: இரவு 9
  இடம்: நாகபுரி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai