Enable Javscript for better performance
எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ஓஎன்ஜிசி, பெங்களூரு- Dinamani

சுடச்சுட

    

    எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ஓஎன்ஜிசி, பெங்களூரு

    By DIN  |   Published on : 06th August 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    91-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஓஎன்ஜிசி, பெங்களூரு ஹாக்கி ஆகிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஓஎன்ஜிசி அணி 5-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
    ஓஎன்ஜிசி தரப்பில் திவாகர் ராம் இரு கோல்களையும், மன்தீப் அந்தில், டைரான் பெரேரா, விகாஷ் டோப்போ ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். ரயில்வே தரப்பில் கரண் பால் சிங், ராஜூ பால், ஷேஷே கெளடா ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
    பஞ்சாப் தோல்வி: பின்னர் நடைபெற்ற 2-ஆவது அரையிறுதியில் பெங்களூரு ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியைத் தோற்கடித்தது. பெங்களூரு அணி தரப்பில் சந்தீப் கே.சிங், உமேஷா, ஜென்ஜென் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பஞ்சாப் தரப்பில் ககன்தீப் சிங் ஆறுதல் கோலடித்தார். அரையிறுதியில் தோற்ற நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரு அணிகளும் குரூப் சுற்றில் தங்களின் பிரிவில் முதலிடம் பிடித்த அணிகளாகும்.
    இறுதிச் சுற்று: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிச் சுற்றில் ஓஎன்ஜிசி அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோதுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai