சுடச்சுட

    
    spt2

    இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது.
    இதையடுத்து "பாலோ-ஆன்' பெற்ற அந்த அணி, தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடியது. கருணாரத்னே-குஷல் மென்டிஸ் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை அணி இன்னும் 230 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
    இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா 133, ரஹானே 132, ஜடேஜா ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தனர். இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. மென்டிஸ் 16, சன்டிமல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    183-க்கு ஆல் அவுட்: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தினேஷ் சன்டிமல் 10 ரன்களில் வெளியேற, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்தவர்களில் டிக்வெல்லா அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ் 26, தில்ருவான் பெரேரா 25 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது.
    இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    இலங்கை "பாலோ-ஆன்': முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இலங்கை அணிக்கு "பாலோ-ஆன்' கொடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் உபுல் தரங்கா 2 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
    இதையடுத்து கருணாரத்னேவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி இலங்கை அணியை சரிவுக்குள்ளாகாமல் பார்த்துக் கொண்டது. இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆட, 24-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இலங்கை.
    மென்டிஸ் சதம்: இதன்பிறகு மென்டிஸ் 53 பந்துகளில் அரை சதமடிக்க, மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த கருணாரத்னே 83 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். "டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய குஷல் மென்டிஸ் 110 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த மூன்றாவது சதமாகும்.
    இலங்கை அணி 54.5 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்திருந்தபோது மென்டிஸ் ஆட்டமிழந்தார். அவர் 135 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் குவித்த நிலையில், பாண்டியா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து "நைட் வாட்ச்மேனாக' புஷ்பகுமாரா களமிறக்கப்பட்டார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 200 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 92, புஷ்பகுமாரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
    இன்னும் 230 ரன்கள்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை அணி இன்னும் 230 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியிருந்தாலும், 4-ஆவது நாள் காலையில் அந்த அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் முயற்சிப்பார்கள். எனவே இந்தப் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தாலும்கூட, இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியிலிருந்து தப்ப முடியாது.

    துளிகள்...

    3

    இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 439 ரன்கள் முன்னிலை பெற்றது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய முன்னிலையாகும். 2007-இல் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 492 ரன்கள் முன்னிலை பெற்றதே
    இன்றளவும் சாதனையாக உள்ளது. அதற்கடுத்த படியாக 2011-இல்
    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 478 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

    191

    2-ஆவது இன்னிங்ஸில் இலங்கையின் கருணாரத்னே-குஷல் மென்டிஸ் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. பாலோ-ஆன் பெற்ற பிறகு அந்த அணியின் ஒரு ஜோடி குவித்த அதிகபட்ச ரன் இதுதான்.

    26

    இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 26-ஆவது முறையாகஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் அஸ்வின். இதன்மூலம் ஓர் இன்னிங்ஸில் அதிக முறை
    5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். முன்னதாக ஹர்பஜன் சிங் (25 முறை) 2-ஆவது இடத்தில் இருந்தார். அவரை இப்போது அஸ்வின் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். இந்தியர்களில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அவர் 35 முறை ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

    நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி 63 டெஸ்ட் போட்டிகளில் 26 முறை ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதே
    சாதனையாக இருந்தது. அதை இப்போது அஸ்வின் (51 போட்டிகளில்) முறியடித்துள்ளார்.

     


    ஜடேஜா 150 விக்கெட்டுகள்

    இலங்கை வீரர் டி சில்வாவை போல்டாக்கியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா. 32-ஆவது டெஸ்டில் மேற்கண்ட மைல்கல்லை எட்டியுள்ளார் ஜடேஜா.
    இதன்மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. முன்னதாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 34 டெஸ்ட் போட்டிகளில் மேற்கண்ட மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.
    அதேநேரத்தில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ஜடேஜா. முதலிடத்தில் அஸ்வின் (29 போட்டிகளில் 150 விக்கெட்டுகள்) இருக்கிறார்.
    இதுதவிர சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 19-ஆவது இடது கை சுழற்பந்து வீச்சாளர், இந்தியாவின் சார்பில் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-ஆவது வீரர் என்ற பெருமைகளைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா.

     

    ஸ்கோர் போர்டு

    இந்தியா-622/9 டிக்ளேர் (புஜாரா 133, ரஹானே 132, ஜடேஜா 70, சாஹா 66, ராகுல் 57, அஸ்வின் 54, ரங்கனா ஹெராத் 4வி/154)

    இலங்கை

    இந்தியா-622/9 டிக்ளேர் (புஜாரா 133, ரஹானே 132, ஜடேஜா 70, சாஹா 66, ராகுல் 57, அஸ்வின் 54, ரங்கனா ஹெராத் 4வி/154)

    கருணாரத்னே (சி) ரஹானே (பி) அஸ்வின் 25 (45)
    உபுல் தரங்கா (சி) ராகுல் (பி) அஸ்வின் 0 (6)
    குஷல் மென்டிஸ் (சி) கோலி (பி) உமேஷ் 24 (64)
    தினேஷ் சன்டிமல் (சி) பாண்டியா (பி) ஜடேஜா 10 (34)
    ஏஞ்செலோ மேத்யூஸ் (சி) புஜாரா (பி) அஸ்வின் 26 (33)
    டிக்வெல்லா (பி) முகமது சமி 51 (48)
    டி சில்வா (பி) ஜடேஜா 0 (1)
    தில்ருவான் பெரேரா (பி) அஸ்வின் 25 (34)
    ரங்கனா ஹெராத் (பி) முகமது சமி 2 (5)
    புஷ்பகுமாரா நாட் அவுட் 15 (22)
    நுவான் பிரதீப் (பி) அஸ்வின் 0 (6)
    உதிரிகள் 5
    மொத்தம் (49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 183

     

    விக்கெட் வீழ்ச்சி: 1-0 (தரங்கா), 2-33 (கருணாரத்னே), 3-60 (சன்டிமல்), 4-64 (மென்டிஸ்), 5-117 (மேத்யூஸ்), 6-122 (டி சில்வா),
    7-150 (டிக்வெல்லா), 8-152 (ஹெராத்), 9-171 (பெரேரா), 10-183 (பிரதீப்).

     

    2-ஆவது இன்னிங்ஸ்: இலங்கை

    கருணாரத்னே நாட் அவுட் 92 (200)
    உபுல் தரங்கா (பி) உமேஷ் 2 (9)
    குஷல் மென்டிஸ் (சி) சாஹா (பி) பாண்டியா 110 (135)
    புஷ்பகுமாரா நாட் அவுட் 2 (18)
    உதிரிகள் 3
    மொத்தம் (60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 209

    பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 9-2-29-1, அஸ்வின் 24-6-79-0,
    முகமது சமி 6-2-13-0, ரவீந்திர ஜடேஜா 16-2-76-0,
    ஹார்திக் பாண்டியா 5-0-12-1.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai