Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: திண்டுக்கல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.
    இதன்மூலம் திண்டுக்கல் அணி 2-ஆவது பெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் திருச்சி அணிக்கு இது 3-ஆவது தோல்வியாகும்.
    திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் வெங்கட்ராமன் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41, விவேக் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தனர்.
    திருச்சி அணி தரப்பில் ஜேசுராஜ், கெளஷிக், பிரபு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் கெளஷிக், பிரபு ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் குமார் சிங், விக்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    தூத்துக்குடி வெற்றி
    மற்றொரு ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தூத்துக்குடி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai