Enable Javscript for better performance
புரோ கபடி: யு}மும்பாவுக்கு 2}ஆவது வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 14}ஆவது ஆட்டத்தில் யு}மும்பா அணி 36}22 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது. யு}மும்பா அணிக்கு இது 2}ஆவது வெற்றியாகும்.
    நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு புள்ளிகளை டெல்லி அணி கைப்பற்ற, அதன்பிறகு யு}மும்பா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. கேப்டன் அனுப் குமாரும், சபீரும் அசத்தலாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 14}8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது யு}மும்பா.
    பின்னர் நடைபெற்ற 2}ஆவது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய யு}மும்பா அணி, ஒரு கட்டத்தில் 26}15 என்ற கணக்கில் முன்னிலை பெறவே, அதன்பிறகு கடைசி வரை டெல்லி அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இறுதியில் யு}மும்பா அணி 36}22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
    யு}மும்பா தரப்பில் அனுப் குமார், சபீர் ஆகியோர் தலா 7 புள்ளிகளைப் பெற்று தந்தனர். அதேநேரத்தில் டெல்லி கேப்டன் மீரஜும் தனது அணிக்காக 7 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். யு}மும்பா அணி டேக்கிள் மூலம் 15 புள்ளிகளைப் பெற்றது. அந்த அணி 19 டேக்கிள்களில் 12}ஐ வெற்றிகரமாக முடித்தது.
    யு.பி.யோதா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் யு.பி. யோதா 32}27 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

     

    இன்றைய ஆட்டங்கள்
    பெங்கால் வாரியர்ஸ்}யு.பி.யோதா
    நேரம்: இரவு 8
    பெங்களூரு புல்ஸ்}பாட்னா பைரேட்ஸ்
    நேரம்: இரவு 9
    இடம்: நாகபுரி
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai