சுடச்சுட

    

    பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, தடகள பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் காந்தி ஆகியோருடைய பெயர்கள் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    இவர்களில் ராமகிருஷ்ணன் காந்தி, கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். அவர், நடைப் போட்டி வீரர் குருமீத் சிங்கின் பயிற்சியாளர் ஆவார். குருமீத் சிங், கடந்த ஆண்டு ஜப்பானின் நயோமி நகரில் நடைபெற்ற ஆசிய நடைப் போட்டியில் 20 கி.மீ. பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பல்ஜிந்தர் சிங்கும் ராமகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றவர்.
    பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனின் பெயர், சில தினங்களுக்கு முன்பு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவருடைய பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயர் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கபடி பயிற்சியாளர் ஹீரானந்த் கட்டாரியாவின் பெயரும் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
    வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜிஎஸ்எஸ்வி பிரசாத் (பாட்மிண்டன்), பிரிஜ் பூஷன் மொஹந்தி (குத்துச்சண்டை), பி.ஏ.ரபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோரின் பெயர்கள்
    பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    தயான் சந்த் விருதுக்கு பூபிந்தர் சிங் (தடகளம்), சயீத் ஷாஹித் ஹக்கீம் (கால்பந்து), சுமேராய் டீட்டே (ஹாக்கி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai