தடகளத்தில் இருந்து வெண்கலத்துடன் விடைபெற்றார் உசைன் போல்ட்

தனது இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று விடைபெற்றார் தடகள வீரர் உசைன் போல்ட்.
தடகளத்தில் இருந்து வெண்கலத்துடன் விடைபெற்றார் உசைன் போல்ட்

16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமையுடன் நடந்து முடிந்தது.

இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டியில் உலகின் அதிவேக மனிதர் மற்றும் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட் பங்கேற்றார்.

மேலும், இதுவே அவரின் பிரியாவிடைப் போட்டியாகவும் அமைந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் ஒரு துரதிருஷ்டம் அரங்கேறியது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பும், ஆதரவும் பெற்றிருந்த உசைன் போல்ட் மூன்றாவதாக வந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

இதில், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டு மீண்டும் பங்கேற்ற அமெரிக்காவின் காட்லின் 9.92 மணித்துளிகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

சக நாட்டு வீரர் கோல்மேன் 9.94 மணித்துளிகளில் 2-ஆவதாக வந்து வெள்ளியை வசமாக்கினார். 

கடைசியாக 9.95 மணித்துளிகளில் வெற்றி இலக்கை அடைந்த ஜமைக்காவின் உசைன் போல்ட் வெண்கலம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com