சீன வீரரை வென்றார் விஜேந்தர் சிங்: இந்தியா-சீனா இடையே அமைதி நிலவ கோரிக்கை

தனிநபர் குத்துச்சண்டைப் போட்டியில் சீன வீரர் சுல்பிஃகார் மைமைதியாலியை வீழ்த்தினார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்.
சீன வீரரை வென்றார் விஜேந்தர் சிங்: இந்தியா-சீனா இடையே அமைதி நிலவ கோரிக்கை

ப்ரோ பாக்ஸிங் எனப்படும் தனிநபர் குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி வீரர் விஜேந்தர் சிங், சீன வீரர் சுல்பிஃகார் மைமைதியாலியை சனிக்கிழமை எதிர்கொண்டார்.

இப்போட்டி மிகவும் பரபரப்புடன் நடைபெற்று 10 சுற்றுகள் வரை நீடித்தது. இறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் வெற்றிபெற்றார்.

மேலும், இதுவரையில் ஆசிய பசிஃபிக் மிடில் வெயிட் சாம்பியனாக இருந்த விஜேந்தர் சிங், இப்போட்டியில் வென்றதன் மூலம் ஓரியன்டல் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

இதன்மூலம் 9 சர்வதேச ப்ரோ பாக்ஸிங் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்தார். ஆனால், சாம்பியன் பட்டத்தை பெற மறுத்து சீன வீரரிடம் மீண்டும் அதனை ஒப்படைத்தார். 

இந்த வெற்றி குறித்து விஜேந்தர் சிங் கூறியதாவது:

இப்போட்டி இவ்வளவு சிறப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை இந்திய-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை சுமூகமாக முடிய வேண்டியும், இருநாடுகளிடையே அமைதி நிலவவும் அர்பணிக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com