சுடச்சுட

    
    spt3

    சாம்பியன் பட்டம் வென்ற ஓஎன்ஜிசி அணிக்கு கோப்பையை வழங்கிய முருகப்பா குழும தலைவர் ஏ.வெள்ளையன். உடன் எம்சிசி தலைவர் ஸ்ரீவத்சன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.

    91-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஓஎன்ஜிசி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஓஎன்ஜிசி அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அணியைத் தோற்கடித்தது.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் ஓஎன்ஜிசி வீரர் திவாகர் ராம் கோலடிக்க, 5-ஆவது நிமிடத்தில் ராஜ்குமார் பால் மூலம் பதிலடி கொடுத்தது பெங்களூரு. இதன்பிறகு 13-ஆவது நிமிடத்தில் பிஜு இர்கால் கோலடிக்க, பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதையடுத்து 28-ஆவது நிமிடத்தில் ஓஎன்ஜிசி வீரர் மன்தீப் அந்தில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் போராட, 52-ஆவது நிமிடத்தில் மச்சையா கோலடிக்க, ஓஎன்ஜிசி அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    பெங்களூரு அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடியபோதும் கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கடைசி நிமிடத்தில் மச்சையா இன்னொரு கோலை அடிக்க, ஓஎன்ஜிசி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
    ரூ.5 லட்சம்: கோப்பையை வென்ற ஓஎன்ஜிசி அணிக்கு ரூ.5 லட்சமும், 2-ஆவது இடம்பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.2.5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
    சிறந்த முன்கள வீரராக ஜென்ஜென் சிங்கும் (பெங்களூரு), சிறந்த மிட்பீல்டராக மச்சையாவும் (ஓஎன்ஜிசி),சிறந்த பின்கள வீரராக திவாகர் ராமும் (ஓஎன்ஜிசி), நம்பிக்கைக்குரிய வீரராக சஞ்சய் ஸால்úஸாவும் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டநாயகன் விருதை பெங்களூரு வீரர் ராஜ்குமார் பால் தட்டிச் சென்றார். பெங்களூரு வீரர் ரகுநாத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், டிஐ சைக்கிள்ஸ் சார்பில் தலா ஒரு சைக்கிளும் வழங்கப்பட்டன.
    பரிசளிப்பு விழாவில் முருகப்பா குழும தலைவர் ஏ.வெள்ளையன் கலந்து கொண்டு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். எம்சிசி தலைவர் ஸ்ரீவத்சன் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai