சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை சூப்பர்ஜயன்ட் அணியைத் தோற்கடித்தது.

    இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூப்பர் கில்லீஸ் அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
    சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மதுரை சூப்பர்ஜயன்ட் அணியில் ஷிஜித் சந்திரன் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அருண் கார்த்திக் 37 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் கேப்டன் ராஜகோபால் சதீஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. சசிதேவ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். முன்னதாக சற்குணம் 41 ரன்கள் எடுத்தார். மதுரை தரப்பில் கார்த்திகேயன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai