சுடச்சுட

  

  5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-20 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் பெங்கால் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
  நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பெங்கால் அணி தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. குறிப்பாக அந்த அணியின் மணீந்தர் சிங் தனது அபார ரைடால் புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
  பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் யு.பி.யோதா அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடியது. ஆனால் பெங்கால் அணியின் முன்னிலை பெரிய அளவில் இருந்ததால், யு.பி.யோதா அணியால் பின்னடைவிலிருந்து மீள முடியவில்லை. அதேநேரத்தில் பெங்கால் ரைடர்கள் வினோத் குமார், ஜங் குன் லீ ஆகியோர் அபாரமாக ஆட, அந்த அணி 40-20 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது. பெங்கால் தரப்பில் வினோத் குமார் 8 புள்ளிகளையும், குன் லீ 7 புள்ளிகளையும் கைப்பற்றினர். மணீந்தர் சிங் 6 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.
  மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

  இன்று விடுமுறை

  திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத்-ஹரியாணா அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு-தெலுகு டைட்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai