சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 360 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 108.4 ஓவர்களில் 362 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 72.1 ஓவர்களில் 226 ரன்களுக்கு சுருண்டது.
    அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி, 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 66.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது ஒட்டுமொத்தமாக 360 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது இங்கிலாந்து.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai