சுடச்சுட

  

  கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்!

  By எழில்  |   Published on : 07th August 2017 02:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sreesanth12

   

  2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது. ஆனால், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ அறிவித்தது.

  குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை. சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது.

  இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் தன் மீதான தடையை நீக்கக்கோரி ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்திருந்தார். போதிய ஆதாரம் இல்லை என்று தில்லி நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தபிறகும் தன் மீதான தடையை நீக்காமல் இருப்பது சட்ட விதிகளை மீறுவதாகும் என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த பிசிசிஐ, நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தாலும் வாழ்நாள் தடையை நீக்குவதற்கு அதுபோதுமான காரணமாக இல்லை என்று கூறியிருந்தது. 

  இதையடுத்து இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கும்படி பிசிசிஐக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai