சுடச்சுட

    

    ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்

    By DIN  |   Published on : 08th August 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றது.
    பிலிப்பின்ஸின் பியூர்ட்டோ பிரின்செஸா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 80 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சடேந்தர் ராவத், உஸ்பெகிஸ்தானின் அல்மேட்டோ ஷோக்ருக்கிடம் தோல்வி கண்டார்.
    80 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரரான மோஹித் கட்டானா, கஜகஸ்தானின் டோகம்பே சாஜின்டைக்கிடம் தோல்வி கண்டார். இதனால் சடேந்தர், மோஹித் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கங்களே கிடைத்தன.
    முன்னதாக அங்கித் நர்வால் (57 கிலோ), பவேஷ் கட்டிமணி (52 கிலோ), சித்தார்த்தா மாலிக் (48 கிலோ), வினித் தாஹியா (75 கிலோ), அக்ஷய் சிவாச் (60 கிலோ), அமான் ஷெர்வாத் (70 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai