சுடச்சுட

    

    உலக தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் டோரி போவீ

    By DIN  |   Published on : 08th August 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt2

    தங்கம் வென்ற மகிழ்ச்சியில் டோரி போவீ. (உள்படம்) மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தங்கம் வெல்லும் முயற்சியில் கிரீஸின் எகதெரினி ஸ்டெபானிடி.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ தங்கப் பதக்கம் வென்றார்.
    அதேநேரத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவின் எலைன் தாம்சன் 5-ஆவது இடத்தைப் பிடித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
    16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ 10.85 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதுதான் இந்த சீசனின் சிறந்த ஓட்டம்.
    இதே பிரிவில் ஐவரி கோஸ்டின் மேரி ஜோஸீ (10.86 விநாடிகள்) வெள்ளியும், நெதர்லாந்தின் டேப்னே ஸ்கிப்பெர்ஸ் (10.96 விநாடிகள்) வெண்கலமும் வென்றனர்.
    இந்தப் போட்டியில் மேரி ஜோஸீ முன்னிலையில் இருந்த நிலையில், இலக்கை எட்டுகிற நேரத்தில் ஒரு "ஜம்ப்' செய்த டோரி போவீ, ஒரு மைக்ரோ விநாடி இடைவெளியில் மேரியிடம் இருந்து தங்கத்தை பறித்தார். டோரி போவீ, கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதேநேரத்தில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்காவின் எலைன் தாம்சன் இந்த முறை பதக்க வாய்ப்பை இழந்தார். 10.98 விநாடிகளில் இலக்கை எட்டிய அவர், 5-ஆவது இடத்தையே பிடித்தார். இந்தப் போட்டியில் முதல் 50 மீ. தூரம் வரை தாம்சனே முதலிடத்தில் இருந்தார். ஆனால் அதன்பிறகு பின்னுக்குத் தள்ளப்பட்ட அவரால் கடைசி வரை அதிலிருந்து மீள முடியவில்லை.
    வெற்றி குறித்துப் பேசிய டோரி போவீ, "இலக்கை எட்டிய பிறகு நான் கீழே விழுந்துவிட்டேன். நான் முதலிடத்தைப் பிடித்தேனா என்பதில் எனக்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. எனினும் நான் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது' என்றார்.
    கம்பு ஊன்றித் தாண்டுதல்: மகளிர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் கிரீஸின் எகதெரினி ஸ்டெபானிடி 4.91 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்காவின் சான்டி மோரீஸ் (4.75 மீ.), வெனிசுலாவின் ராபெய்லீஸ் பெய்னாடோ (4.65 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai