சுடச்சுட

  

  இத்தாலி டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் 2 மாதங்கள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
  கடந்த பிப்ரவரியில் போட்டி இல்லாத நேரத்தில் அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது, அதில் லெட்ரோசோல் என்ற மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
  இது தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாரா எர்ரானி ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 2 மாதம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடைக்காலம் கடந்த 3-ஆம் தேதி முதல் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.
  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சாரா எர்ரானி, "எனது தனிப்பட்ட வாழ்விலும் சரி, டென்னிஸ் வாழ்க்கையிலும் சரி, நான் ஒருபோதும் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தியதில்லை' என கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai