சுடச்சுட

    

    சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
    இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக 4-ஆவது டிராவைப் பதிவு செய்துள்ளார். எனினும் அவர் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
    அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-ஆவது சுற்றில் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார் ஆனந்த். அதேநேரத்தில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸின் மேக்ûஸம் வச்சியரிடம் தோல்வி கண்டார்.
    அமெரிக்காவின் பாபியானோ கருணா, ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுடனும், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர், அமெரிக்காவின் வெஸ்லே சோவுடனும் டிரா செய்தார். மற்றொரு ரஷிய வீரரான இயான் நெபோம்நியாக்ஷி, அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை தோற்கடித்தார்.
    இன்னும் 5 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், பிரான்ஸின் மேக்ûஸம் வச்சியர் 3 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்காவின் பாபியானோ கருணா 2.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் கர்ஜாகின், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் வெஸ்லே சோ ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர், இயான் நெபோம்நியாக்ஷி, அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai