Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: காரைக்குடி 150 ரன்கள் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.
    திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் விஷால் வைத்யா 41, எஸ்.பத்ரிநாத் 26, ஷாஜன் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. திண்டுக்கல் தரப்பில் விக்டர், சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    பின்னர் ஆடிய திண்டுக்கல் அணியில் சுப்பிரமணியன் சிவா 17, கங்கா ஸ்ரீதர் ராஜு 27, ஜெகதீசன் 14 ரன்கள் சேர்த்து வெளியேற, அந்த அணி ஆட்டம் கண்டது. அந்த அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 34 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai