அஸ்வின் இடம்பெறாத சாதனைப் பட்டியலில் மொயீன் அலி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
அஸ்வின் இடம்பெறாத சாதனைப் பட்டியலில் மொயீன் அலி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து. 

மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில் 108.4 ஓவர்களில் 362 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 99, பென் ஸ்டோக்ஸ் 58, ஜோ ரூட் 52 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 72.1 ஓவர்களில் 226 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் டெம்பா பெளமா 46, ஆம்லா 30 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 69.1 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கல் 4 விக்கெட்டுகளையும், ஆலிவர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

இதையடுத்து 380 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா.
 இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் மொயீன் அலி இதன் மூலம் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார்.

8 - ஒரு டெஸ்ட் தொடரில் 250 ரன்களும் 25 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களின் எண்ணிக்கை. ஒன்பதுமுறை இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 4 டெஸ்ட் தொடரில் இதைச் சாதித்த ஓரே வீரர், மொயீன் அலி. இதர 8 முறையும் 5 அல்லது  6 டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. 

41 டெஸ்டுகளுக்குப் பிறகு 6 வீரர்கள் மட்டுமே 2000 ரன்களும் 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் இடம்பெறாத இந்தப் பட்டியலில் மொயீன் அலியும் உள்ளார்.

2000 ரன்கள் + 100 விக்கெட்டுகள்

வினூ மன்கட்
கீத் மில்லர்
டிரவோர் கொட்டார்ட் 
டோனி கிரேயிக் 
ஷகிப் அல் ஹசன்
மொயீன் அலி 

சமீபத்தில் தன்னுடைய 51-வது டெஸ்ட் போட்டியை விளையாடிய அஸ்வின், அதில் 2000 டெஸ்ட் ரன்களை எட்டினார். குறைந்த போட்டிகளில் 2000 ரன்கள், 250 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்கிற பெருமையைப் பெற்றார். எனினும் மொயீன் அலி அஸ்வினுக்கு முன்பு 2000 ரன்களை எடுத்து மற்றொரு சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com