Enable Javscript for better performance
சாம்பியன்ஷிப் தரவரிசை: முதல் 10 இடங்களுக்குள் சிந்து, ஸ்ரீகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன்ஷிப் தரவரிசை: முதல் 10 இடங்களுக்குள் சிந்து, ஸ்ரீகாந்த்

    By DIN  |   Published on : 09th August 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
    உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் 21-ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்குகிறது. இந்நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கான போட்டித் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதன்படி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து மகளிர் பிரிவில் 4-ஆவது இடத்தில் உள்ளார். உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் உள்ளார்.
    மகளிர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தாய் ஸு யிங் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, ஜப்பானின் அகானே யாமாகுசி போட்டித் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
    ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொருத்த வரையில், இந்தோனேஷிய, ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் 8-ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்பாக 7-ஆவது இடத்தில் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனும், 5 முறை உலக சாம்பியனுமான சீனாவின் லின் டான் உள்ளார்.
    இந்தியாவின் அஜய் ஜெயராம், சாய் பிரணீத் ஆகியோர் முறையே 13 மற்றும் 15-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். உலகின் 28-ஆம் நிலை வீரரான சமீர் வர்மா போட்டித் தரவரிசையில் இடம்பெறவில்லை.
    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா/சிக்கி ரெட்டி ஜோடி 15-ஆவது இடத்தில் உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai