Enable Javscript for better performance
புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது ஹரியாணா- Dinamani

சுடச்சுட

    
    kabadi

    குஜராத் வீரரை வீழ்த்தும் முயற்சியில் ஹரியாணா வீரர்கள்.

    புரோ கபடி லீக் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை எதிர்கொண்ட ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி, 32-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
    நாகபுரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 10 ரைடு புள்ளிகள் பெற்றன. ஹரியாணா அணி 16 டேக்கிள் புள்ளிகளும், குஜராத் அணி 9 டேக்களில் புள்ளிகளும் பெற்றன. ஹரியாணாவுக்கு 2 'ஆல் அவுட்' புள்ளிகள் கிடைத்தது.
    ஹரியாணா அணியில் அதிகபட்சமாக அதன் ரைடர் விகாஸ் கோன்ட்லா 6 புள்ளிகளும், தடுப்பாட்டக்காரர் மோகித் சில்லார் 7 புள்ளிகளும் பெற்றனர். குஜராத் வீரர் சச்சின் ரைடில் 5 புள்ளிகளும், தடுப்பாட்டத்தில் 3 புள்ளிகளும் பெற்றார்.
    இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஹரியாணா அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அந்த அணியின் ரைடர் சுர்ஜித் சிங் தனது முதல் ரைடில் 2 புள்ளிகளை பெற்று அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினார். குஜராத் தட்டுத்தடுமாறி புள்ளிகளை பெற்ற நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அந்த 13-9 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியது.
    இந்நிலையில், 2-ஆவது பாதியில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக குஜராத் வீரர் அபோஸார் மிகானிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்திலும் ஹரியாணா அசத்தலாக ஆட, இறுதியில் 32-20 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா வெற்றி பெற்றது.
    ஆட்டம் சமன்: இதனிடையே, பெங்களூரு புல்ஸ்-தெலுகு டைட்டன்ஸ் மோதிய ஆட்டம் 21-21 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து தெலுகு அணி மீண்டுள்ளது.
    இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரைடு புள்ளிகளும், 7 டேக்கிள் புள்ளிகளும், 2 ஆல் அவுட் புள்ளிகளும் பெற்றன. தெலுகு அணி 14 ரைடு புள்ளிகளும், 6 டேக்கிள் புள்ளிகளும் பெற்றன.
    பெங்களூரு தரப்பில் ரோகித் குமார் அதிகபட்சமாக 5 ரைடு புள்ளிகள்பெற்றார். தடுப்பாட்டக்காரர் பிரீத்தம் சில்லார் 2 புள்ளிகள் பெற்றார். தெலுகு அணியில் கேப்டன் ராகுல் செளதரி 8 ரைடு புள்ளிகள் பெற, தடுப்பாட்டக்காரர் ராகேஷ் குமார் 2 புள்ளிகள் பெற்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai