Enable Javscript for better performance
மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ்: 146/3- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணி.
    இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால், ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.
    தொடக்க வீரர்களாக கேப்டன் அருண் கார்த்திக்கும், சந்திரனும் களம் கண்டனர். இதில் 7 பந்துகளை எதிர்கொண்ட சந்திரன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். உடன் வந்த அருண் கார்த்திக் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த மணி பாரதி 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    அடுத்து வந்த ஷாருக் கான் டக் அவுட் ஆனார். இவ்வாறாக 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ். அருண் கார்த்திக் 38 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களுடனும், கணேஷ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருவள்ளூர் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai