Enable Javscript for better performance
அர்ஜுனா விருது கமிட்டி மீது கார் பந்தய வீரர் கெளரவ் கில் சாடல்- Dinamani

சுடச்சுட

    

    அர்ஜுனா விருது கமிட்டி மீது கார் பந்தய வீரர் கெளரவ் கில் சாடல்

    By DIN  |   Published on : 10th August 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kill

    அர்ஜுனா விருது கிடைக்காததால் கடும் கோபமடைந்துள்ள இந்திய கார் பந்தய வீரர் கெளரவ் கில், விருது கமிட்டி மீது கடுமையாக சாடியுள்ளார்.
    ஆசிய பசிபிக் ரேலி போட்டியில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான கெளரவ் கில் மேலும் கூறியதாவது: கோல்ஃப், கேரம், ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு மக்களிடம் பெறிய வரவேற்பு கிடையாது. ஆனால் அந்த விளையாட்டுகளுக்கெல்லாம் தொடர்ச்சியாக அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில் மோட்டார் பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கு ஏன் அர்ஜுனா விருது வழங்கக்கூடாது என கேள்வியெழுப்பினார்.
    கார் பந்தய வீரர்கள் யாருக்கும் இதுவரையில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டதில்லை. 2015-இல்தான் மோட்டார் பந்தயத்தையே மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. தேசிய விளையாட்டு அமைப்புகளின் பட்டியலிலும் சேர்த்துள்ளது. எனினும் 2010-இல் இந்திய கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு நாட்டின் 4-ஆவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
    அதுகுறித்துப் பேசிய கெளரவ் கில், '10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பெரிய அளவில் கார் பந்தயங்கள் நடைபெற்றதில்லை. விருது கமிட்டியினர் எங்களை அங்கீகரித்தால்தான், இந்தியாவில் மோட்டார் பந்தய விளையாட்டு பிரபலமடையும். அப்போதுதான் ஏராளமான இளைஞர்கள் மோட்டார் பந்தயத்தில் பங்கேற்க முன்வருவார்கள்.
    ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்பவர்கள்தான் அர்ஜுனா விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்றால், அது போன்ற போட்டிகளில் இடம்பெறாத விளையாட்டுகளைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனா விருது பெறுவது கடினமாகும். அதேநேரத்தில் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டியில் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. என்னுடைய விளையாட்டில் நான் இதுவரையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரையில் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai