சுடச்சுட

    

    உலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் பாஸீ

    By DIN  |   Published on : 10th August 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pasy

    800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் பியர் பாஸீ.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப் பதக்கம் வென்றார்.
    16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் பாஸீ 1 நிமிடம் 44.67 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் 4-ஆவது இடம்பிடித்த பாஸீ, இந்த முறை தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    இதே பிரிவில் போலந்தின் ஆடம் (1:44.94) வெள்ளியும், கென்யாவின் கிப்யேகன் பெட் (1:45.21) வெண்கலமும் வென்றனர்.
    ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வேய்டி வான் நீகெர்க் 43.98 விநாடிகளில் முதலிடத்தைப் பிடித்து தங்கமும், பஹாமாஸின் ஸ்டீவன் கார்டினர் (44.1) வெள்ளியும், கத்தாரின் அப்தல்லா ஹாரூன் (44.48) வெண்கலமும் வென்றனர்.
    ஆடவர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் கென்யாவின் கிப்ருடோ 8 நிமிடம், 14.12 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். மொராக்கோ வீரர் சோபியான் (8:14.9) வெள்ளியும், அமெரிக்காவின் இவான் ஜாகெர் (8:15.53) வெண்கலமும் வென்றனர். ஆடவர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் அமெரிக்காவின் சாம் ஹென்ரிக்ஸ் 5.95 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். போலந்தின் பியோட்டர் லீசெக் (5.89 மீ.) வெள்ளியும், பிரான்ஸின் ரெனால்ட் லாவில்னி (5.89 மீ.) வெண்கலமும் வென்றனர்.
    மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் செக்.குடியரசின் பர்போரா ஸ்படகோவா 66.76 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதே பிரிவில் சீனாவின் லிங்வெய் லீ (66.25 மீ.) வெள்ளியும், சீனாவின் ஹுய்ஹுய் லூ (65.26 மீ.) வெண்கலமும் வென்றனர்.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai