Enable Javscript for better performance
ஏடிபி சேலஞ்சர்: விஷ்ணுவர்தன் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் விஷ்ணுவர்தன் தோல்வி கண்டார்.
    சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் விஷ்ணுவர்தன் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்ட்ஸ் பெரங்கிஸிடம் தோல்வி கண்டார்.
    சாகேத் மைனேனி, சித்தார்த் ராவத், பாலாஜி, சசிக்குமார், விஜய் சுந்தர் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறிய நிலையில், இப்போது விஷ்ணுவர்தன் 2-ஆவது சுற்றில் தோற்றதன் மூலம் சீன சேலஞ்சர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
    அரையிறுதியில்...அதேநேரத்தில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவர்தன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்களில் சீனாவின் டி ஊ-ஜென் ஜங் ஜோடியைத் தோற்கடித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai