சுடச்சுட

    

    சிறந்த வீரர்களை உருவாக்க பள்ளியில் பயிற்சியளிப்பது அவசியம்: ஜான்டி ரோட்ஸ்

    By DIN  |   Published on : 10th August 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jandy

    சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் விளையாட்டுத் துறையில் சாதனைப் புரிந்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஜான்ட்டி ரோட்ஸ்.

    ஒவ்வொரு பள்ளியிலும் சிறு வயதிலேயே மாணவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
    சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சார்பில் விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதைப் போல், விளையாட்டு உள்பட பல்வேறு தனித்திறன்களைவளர்த்து கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு பள்ளிகளில் சிறுவயதிலேயே மாணவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் தொடர் பயிற்சி அளிப்பது அவசியமாகும்.
    தென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், இங்குள்ள பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். இதுபோன்று செய்வதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். தலைசிறந்த வீரர்களையும் உருவாக்க முடியும். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 90 ரன்களைத் தொடர்ந்து, 100 ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது இயல்பாகவே பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், டி20 கிரிக்கெட் போட்டியில் 95 ரன்கள் வரையிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் ஆட முடியும். டி20 போட்டியில்தான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்க ளது தனித்திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்றார்.
    தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களைஅவர் வழங்கினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் ஜான்டிரோட்ஸின் முகமூடி அணிந்து ஜான்டி ரோட்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு நினைவுப் பரிசாக வெள்ளி வீரவாள் வழங்கப்பட்டது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai