Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: திருச்சி அணி 132 ரன்கள் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.
    திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதயைடுத்து பேட் செய்த திருச்சி அணியில் பாரத் சங்கர்-கேப்டன் இந்திரஜித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது.
    பாரத் சங்கர் 20 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த அகில் ஸ்ரீநாத் 14 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் இந்திரஜித் 30 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்வரிசையில் நிலேஷ் சுப்பிரமணியன் 14, கெளஷிக் 13, ஆதித்யா 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 13 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது திருச்சி அணி. சூப்பர் கில்லீஸ் தரப்பில் மகேஷ் 3 விக்கெட்டுகளையும், குமரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai