Enable Javscript for better performance
புரோ கபடி: பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    kabadi

    புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள்.

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
    இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கும் பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 11 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.
    நாகபுரியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார் தனது ரைடின் முதல் புள்ளியைக் கைப்பற்ற, பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் புள்ளியைப் பெறுவதற்கு 3-ஆவது நிமிடம் வரை காத்திருந்தது. அந்த அணியின் மணீந்தர் சிங் தனது ரைடின் முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.
    4-ஆவது நிமிடத்தின் முடிவில் பெங்களூரு அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது பெங்கால். இதன்பிறகு பெங்கால் ரைடர் குன் லீ அபாரமாக ஆட, அந்த அணி 8-6 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணியும் அபாரமாக ஆட, அசத்தலான டேக்கிள் மூலம் ஸ்கோரை (9-9) சமன் செய்தது பெங்களூரு அணி. முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 12-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்கோரை (12-12) சமன் செய்தது பெங்கால் அணி. 23-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியை ஆல் அவுட்டாவதிலிருந்து காப்பாற்றினார் ஹரீஷ். 27-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 16-16 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    28-ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் அஜய் குமார் சூப்பர் ரைடின் மூலம் 4 புள்ளிகளைப் பெற, அதுவே திருப்புமுனையாக அமைந்தது. இதனால் பெங்களூரு அணி 20-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. 30-ஆவது நிமிடத்தில் பெங்கால் அணியை ஆல்அவுட்டாக்கிய பெங்களூரு அணி 24-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    கடைசிக் கட்டத்தில் பெங்கால் அணி போராடினாலும், புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததேயொழிய தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில் பெங்களூரு வாரியர்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
    பெங்களூரு தரப்பில் அஜய் குமார் 9 புள்ளிகளையும், கேப்டன் ரோஹித் குமார் 6 புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர். பெங்கால் தரப்பில் ஜங் குன் லீ 8 புள்ளிகளைக் கைப்பற்றினார். பெங்களூரு வீரர் ஆசிஷ் குமார் தனது அபார டேக்கிள் மூலம் 5 புள்ளிகளை பெற்று தந்தார்.
    இன்றைய ஆட்டங்கள்
    புணேரி பால்டான்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், நேரம்: இரவு 8
    தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ், நேரம்: இரவு 9
    இடம்: நாகபுரி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai