Enable Javscript for better performance
மான்ட்ரியால் ஓபன்: டொமினிக் தீம் அதிர்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    mantrialopen

    டொமினிக் தீமுக்கு எதிரான ஆட்டத்தில் டீகோ ஸ்வார்ட்ஸ்மான்.

    மான்ட்ரியால் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
    கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேரடியாக 2-ஆவது சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தார் டொமினிக் தீம். போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த அவர், தனது 2-ஆவது சுற்றில் 4-6, 7-6 (7), 5-7 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மானிடம் தோல்வி கண்டார்.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த டொமினிக் தீம், அடுத்த செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (7) என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 3-ஆவது சுற்றில் ஒரு கட்டத்தில் டொமினிக் தீம் 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
    இதனால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட ஸ்வார்ட்ஸ்மான் அடுத்த 5 கேம்களை தன்வசமாக்கி அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரு வீரரை ஸ்வார்ட்ஸ்மான் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
    மற்றொரு 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்டுசன் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். அதேநேரத்தில் குரோஷியாவின் போர்னா கோரிச், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவின் சாம் கியூரி உள்ளிட்டோர் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டு 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai