சுடச்சுட

    
    padel

    இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஐசிசி விதிமுறையை மீறியதன் காரணமாக 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அக்ஷர் படேலுக்கு 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.
    இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 12-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்கவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளிலும், 7 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கும் அக்ஷர் படேல், டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'ஏ' அணிகள் இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அதில் அக்ஷர் படேல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
    3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது. காலே, கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வென்றதன் மூலம் இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
    அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், அக்ஷர் படேல், சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai